136. அருள்மிகு சௌந்தர்யநாதர் கோயில்
இறைவன் சௌந்தர்யநாதர்
இறைவி பெரியநாயகி
தீர்த்தம் அமிர்த தீர்த்தம்
தல விருட்சம் பனை மரம்
பதிகம் திருஞானசம்பந்தர், சுந்தரர்
தல இருப்பிடம் திருப்பனையூர், தமிழ்நாடு
வழிகாட்டி திருவாரூர் - பேரளம் சாலையில் 11 கி.மீ தொலைவில் உள்ள ஆண்டிப்பந்தல் வந்து அங்கிருந்து வலதுபுறம் திரும்பும் வடகரை சாலையில் சென்று கோயில் வளைவு பார்த்து திரும்பி சுமார் ஒரு கி. மீ. தொலைவு சென்றால் கோயிலை அடையலாம்.
தலச்சிறப்பு

Tirupanaiyur Gopuramபனை மரங்கள் சூழ்ந்த தலமாக இருந்ததால் 'திருப்பனையூர்' என்ற பெயர் பெற்றது.

மூலவர் 'சௌந்தர்யநாதர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், சிறிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பாள் 'பெரிய நாயகி' என்னும் திருநாமத்துடன் சிறிய வடிவில் தரிசனம் தருகின்றார்.

கோஷ்டத்தில் பராசர முனிவர், தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் மாற்றுரைத்த விநாயகர், வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமண்யர், மகாலட்சுமி, சப்தரிஷிகள் வணங்கிய சப்த லிங்கங்கள், பைரவர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன.

Tirupanaiyur Vinayagarஅம்மன் சன்னதி அருகில் 'துணை இருந்த விநாயகர்' சன்னதி உள்ளது. கரிகால் சோழன் மன்னனுக்கு இளம் வயதில் எதிரிகளால் ஆபத்து ஏற்பட்டபோது அவரையும், அவரது தாயாரையும் இக்கோயிலுக்கு அனுப்பி வைத்து எட்டு ஆண்டுகள் இங்கு பத்திரமாக இருக்க வைத்தனர். அவர்களுக்கு துணையாக இருந்ததால் விநாயகருக்கு இப்பெயர் ஏற்பட்டது.

Tirupanaiyur Palmவெளிப்பிரகாரத்தில் தலவிருட்சமான இரண்டு பனை மரங்கள் உள்ளன. அதன் அடியில் சிவபெருமான் பனங்காட்டீசர் (தாலவனேஸ்வரர்) என்னும் திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார்.

திருப்புகலூர் தலத்தில் இருந்து இத்தலத்திற்கு வழிபட வந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஊருக்கு வெளியே சிவபெருமான் நடனக் காட்சி அளித்த தலம். பராசர முனிவர் வந்து வழிபட்ட தலம்.

திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com